Updated: 13-01-2022 05:08 pm
பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றுக!-ஆணையருக்கு உத்தவிட்ட உயர்நீதிமன்றம்!
ஜெயங்கொண்டத்தில் வசித்து வரும் மணிகண்டன் என்ற மருத்துவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதில் ஜோசப் ரெட்டியார் காலணியில் சிலர் பொது பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளதாகவும்,அந்த ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.#highcourt