tamil news
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

பாலக்கோடு - கோவில் இடத்தில் வித்யா மந்திர் பள்ளி..கோவிந்தாவிற்கு கோவிந்தா...போட்ட கோவிந்தராஜி!

Updated: 29-09-2023 09:30 am

tamil news

தமிழகத்தில் கோவில் நிலங்களை மீட்க தமிழக அரசு இந்து அறநிலைத்துறை சார்பில், அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படி அதிரடி நடவடிக்கைகளே கேள்விக்குறி ஆகும் பொழுது, பல இடங்கள் மீட்கப்படுவதில் சிரமங்கள் உள்ளன . அதிலும் அதிகாரிகள் துணை போனால் சொல்வதற்கில்லை .தற்பொழுது இந்திய பிரதமர் மோடி தமிழ்நாட்டு கோயில்கள் மற்றும் நிலங்களை பற்றி கூறியது, தமிழக அரசு கோவில் நில பராமரிப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்ற ஒரு விவாதத்தை பலரிடையே முன் வைத்தது. 


ஆனால் திராவிட முற்போக்கு சிந்தனை உள்ள அரசியல்வாதிகள் மற்றும் இந்து சமயத்தை சார்ந்தவர்களே கோயில் நிலங்கள் அதனுடைய வருமானங்கள் பல பேரால் சீரழிந்து வந்ததாகவும்,அவை சரிசெய்யப்பட்டு நிலங்கள் பல மீட்கப்படுபதாகவும் கூறுகின்றனர். 


இதற்கு பல சான்றுகள் கூறலாம் .இப்படிப்பட்ட காலத்திலும் பல இடங்களை ஆக்கிரமிப்பாளர்கள் கோயில் சொத்துக்களை தன் வசப்படுத்தி அதன் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வந்துள்ள நிலையில் ,அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க போனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவது, அல்லது முஸ்லிம்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள குடும்பங்களை அப்புறப்படுத்துங்கள் என்று மதப் பிரச்சினைகளை தூண்டுவது அல்லது ஏழைகள் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்ந்து வரும் வீடுகளை காரணமாக காட்டி தன்னைக் காப்பாற்றிக் கொள்வது போன்ற சமூக நல்லிணக்க விரோத செயல்களில் ஈடுபடுவதாக ஆன்மீகவாதிகள் கூறி வருகின்றனர்.


கோயில் மீது அக்கறை உள்ளவர்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்து மதத்தை போற்றுபவர்கள் தாமாக , முன்வந்து கையகப்படுத்தி உள்ள நிலங்களை அரசுக்கு தெரியப்படுத்தி அந்த கோயிலுக்கு வழங்குவதே சாலச் சிறந்ததாகும் என்பது ஆன்மீகவாதிகளின் கூற்றாக உள்ளது. 


இப்படி இருக்கையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவில் மிகப் பிரபலமான 2000க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆனது தற்பொழுது கரி வரதராஜ பெருமாள் என்று அழைக்கப்படும் வெங்கட்ரமண சுவாமி திருகோயிலின் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


தற்பொழுது அந்த கோயில் நிலத்தில் பல நடுத்தர மக்கள் வாழும் வீடுகளும் கட்டப்பட்டுள்ளது. பலர் அதில் வங்கி கடன்களும் பெற்றுள்ளனர். இப்பஇ வசிக்கும் மக்களை மையமாக வைத்து சிலர் ஏழை மக்களின் வீடுகளை காண்பித்தும் ,மாணவர்களின் எதிர்காலத்தை காண்பித்தும், பள்ளி கட்டிடத்தை இடிக்க கூடாது என்று கூறுகின்றர். பாலகோட்டின் வேறு  பகுதியில் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக சிலர் கூறிக் கொள்வது என்னவெனில் ,பல கோயிலிடங்களில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் .ஏன் அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது என்று விதண்டாவாதமாக கேள்வி எழுப்பி தங்களிடத்தை பாதுகாத்துக் கொண்டு வருகின்றனர்,' என்று சமூக நல்லிணக்க வாதிகள் கூறுகின்றனர்.


மேலும் இந்த வித்யா மந்திரி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆனது கோவிந்தராஜ் என்கிற நபருக்கு சொந்தமானது மேலும் இவருக்கு ஆர் எம் எஸ் என்ற மெட்ரிகுலேஷன் பள்ளியும் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியும் மூகாம்பிகை மகளிர் கலை கல்லூரியும் சொந்தமாக உள்ளது.


"ஜி " என்று அழைக்கக்கூடிய இந்த கோவிந்தராஜ் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ளது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் காண்பித்துக் கொண்டு கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளார் என்றும், இவருக்கு பாலக்கோட்டில் மூகாம்பிகை பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் உள்ளது என்றும் ,கூறுவதோடு மட்டுமல்லாமல் இவர் ஏன் கோவிலிடம் என்று தெரிந்த பின்னும் கொடுக்க மறுக்கிறார் எனில் உதாரணத்திற்கு சுமார் 2000 மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.10000 விதம் பள்ளி கல்வி கட்டணம் செலுத்தினால் அதனுடைய மொத்த மதிப்பு ரூபாய் பல கோடியாகும் . இப்படி இருக்கையில், இவ்வளவு பெரிய லாபம் தரக்கூடிய இந்த இடத்தை கொடுக்க மனம் இல்லாது ,அவர் ஆக்கிரமிப்பாளராக இருந்து கொண்டு வருவது மிக வேதனை அளிப்பதாக அப்பகுதி ஆன்மீகவாதிகளாலும் தர்மபுரி மாவட்ட சமூக அக்கறை உள்ள மனிதர்களால் பேசப்பட்டு வருகிறது. 


மேலும் கூறும் பொழுது ,"கோடி கணக்கில் வருமானம் கொண்ட பழம் பெருமை வாய்ந்த ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில் பூஜை செலவுக்கு கூட பணம் இல்லாமல் கோவிந்தா போட்டுள்ளார் அக்கிரமிப்பாளர் கோவிந்தராஜ் ",எனறும், அதே இடத்தில் பிறந்து வளர்ந்த அவருக்கு கோவில் நிலம் என்று எப்படி தெரியாமல் போயிருக்கும் என்றும் கேள்வி எழுப்பிகின்றனர்.


ஆக "கோவிந்தன் இடத்தை கோவித்தா போட்ட கோவிந்தா..ரா....ஜி " ஆனார் என்ற பட்ட பெயருடன் அழைக்கின்றனர் பாலக்கோடு பகுதி மக்கள்.


"நீதிமன்றத்தை காரணம் காட்டி ,ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பது,வேடிக்கையாக உள்ளது....ஏனெனில் நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்றை எந்த தடை ஆணையும் பிறப்பிக்கவில்லை..எனில் ஆக்கிரமிப்பை அகற்றலாம் என்பதே " ,விவரம் அறிந்தவர்களின் கூற்றாக உள்ளது.#dharmapuritemple