tamil news
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட் -ஒப்பந்ததாரர்களுக்கு கண்டிப்புடன் அறிவுரை!

Updated: 15-01-2022 11:18 am

tamil news

முதல்வர் ஸ்டாலின் திடீர் விசிட் -ஒப்பந்ததாரர்களுக்கு கண்டிப்புடன் அறிவுரை!


தமிழகத்தில் சாலை போடுவதற்கு ஒப்பந்தங்கள் எடுத்து, சாலை போட்டு வரும் ஒப்பந்ததாரர்கள் விதிமுறைகளின்படி ஏற்கனவே போட்டுள்ள சாலையை சுரண்டி எடுத்துவிட்டு அதன் பிறகுதான் புதிய சாலையை போட வேண்டும். ஆனால் பல இடங்களில் அதுபோல செய்யாமல் , போட்ட சாலையின் மேலே ,மீண்டும் புதிய சாலையை போடுவதால் சாலையின் மட்டம் , அதிகரித்து தண்ணீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனை அறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு திடீரென இரவு நேரத்தில் சென்னையில் சோதனை செய்து ஒப்பந்ததாரர்களை கண்டித்து மீண்டும் புது சாலையை போட வேண்டும் என்று உத்தரவிட்டார்.


 இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு திடீரென சென்னையில் சில பகுதிகளில் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரிகளுக்கும் மில்லிங் செய்யாமல் சாலை போடக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். இந்த திடீர் விசிட் டால் ஒப்பந்ததாரர்கள் கதிகலங்கி போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது தொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்ட செய்தியானது,"சென்னையில் சாலை இடப்படும் பணிகளை இரவில் நேரில் ஆய்வு செய்து "மில்லிங்" செய்யாமல் சாலை போடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். 


அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை இடும் பணிகளை மேற்கொள்ளும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும்." என்று குறிப்பிட்டுள்ளார்.#cmvisit