Updated: 14-01-2022 08:08 am
தமிழக முதல்வரின் பொங்கல் வாழ்த்து-டுவிட்டரில் வெளியீடு!
வருகிற தைப்பொங்கலை முன்னிட்டு அரசியல் கட்சியினர்,அதிகாரிகள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர்,"
தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்!
கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.#pongal