Updated: 14-08-2022 09:58 pm
நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலான செய்தித்தாள் விளம்பரத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தை கர்நாடக அரசு புறக்கணித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் “ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் - சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாஜக தலைமையிலான அரசு ஹர் கர் திரங்கா என்ற பரப்புரையை முன்னெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் மூவர்ணக் கொடியை முகப்பு புகைப்படமாக மாற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஹர் கர் திரங்கா பிரசாரத்தின் மூலம் பல்வேறு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அதில், மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் புகைப்படங்கள் அவர்களை பற்றிய சிறு குறிப்புடன் இடம்பெற்றுள்ளது. ஆனால், சுதந்திர போராட்ட தியாகியும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் அதில் இடம்பெறவில்லை. ‘புரட்சியாளர் சாவர்க்கர்’ என்று அடைமொழியிட்டு சாவர்கரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.இச் செயல் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.#independence day Nerhu