Updated: 12-11-2021 01:38 pm
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 7 ம் நாள் சூரசம்ஹாரம் அதாவது முருகப்பெருமான் சூரப்பத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைப்பெற்றது.அதனை தொடர்ந்து அடுத்த நாளான நேற்று 8 ம் நாள் இந்திரன் மற்றும் தேவர் களை சிறையிலிருந்து மீட்டெடுத்தமையால் , தேவேந்திரன் அளித்த வாக்குறுதிபடி வள்ளியை முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து 9 ம் நாளான இன்று கோவிலில் முருகப்பெருமானை தரிசிக்க அரசு அனுமதி அளித்துள்ளாதால் , ஏராளமான பக்தர்கள் கொட்டும் மழையிலும் கடலில் புனித நீராடி சுப்பிரமணியசுவாமியை தரித்து வருகின்றனர்.