tamil news
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

தருமபுரி - மாரண்டள்ளி அருகே தலித் பஞ்சாயத்து தலைவரின் கணவருக்கு தலித் என்பதால் கொடியேற்ற அனுமதி மறுப்பா??? ஆட்சியர் விசாரிக்க கோரிக்கை...

Updated: 15-08-2022 05:23 pm

tamil news

தருமபுரி - மாரண்டள்ளி அருகே தலித் பஞ்சாயத்து தலைவரின் கணவருக்கு தலித் என்பதால் கொடியேற்ற அனுமதி மறுப்பா??? ஆட்சியர் விசாரிக்க கோரிக்கை...


தருமபுரி மாவட்டம் மாரண்டள்ளி அருகே உள்ள சாஸ்திராமூட்லு கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது.இந்த கிராமம் உள்ள கெண்டேனள்ளி பஞ்சாயத்து தலைவாராக இருப்பவர் சகுந்தலா ,கணவர் பெயர் ராமசாமி பாண்டியன் .சகுந்தலா கடந்த உள்ளாட்சி தேர்தலில் SC இட ஒதுக்கீட்டில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவர் ஆணவர். இந்த பஞ்சாயத்தின் துணைத்தலைவராக இருப்பவர் தருமன்(திமுக). இன்று காலை பள்ளியில் தேசியக் கொடி ஏற்றவது பற்றி பள்ளியின் சார்பில் பஞ்சாயத்து தலைவாராக உள்ள சகுந்தலாவிற்கு தகவல் கொடுக்க வில்லையாம்.ஆனால் அவரது கணவர் ராமசாமி பாண்டியன் கலந்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தேசியக் கொடியை ஏற்றும் போது ,ராமசாமியை அழைத்த போது ,திடீரென சிலர் தடுததாகவும்,துணைத் தலைவர் தருமந்தான் ஏற்ற வேண்டும் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.இதனால் தருமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.இந்த சர்ச்சையை கவனித்த சிலர் தகவல்களை வெளியே கசியவிட ,பொதுமக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 


இதனை அறிந்த தலித் மக்கள் சிலர் தலைமை ஆசிரியர் மற்றும் தருமன் சிலர் மீது தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைதுதுள்ளனர்.ஏனெனில் பஞ்சாயத்து தலைவர் வரவில்லை என்ற காரணத்தை சொல்லி ஏற்றகூடாது என சொல்லி தடுத்திருக்கலாம்..ஆனால் தலித் என்ற காரணத்தை மனதில் செயல்பட்டது போல அந்த நிகழ்வு உள்ளதாக சொல்லப்படுகிறது.இப்படி பிசிஆர் சட்டத்தின் படி நடவடிக்கைகள் எடுத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பேசிக் கொள்கின்றனர். ஆனால் சிலர் என்னதான் இந்த பிரச்சனையில் தருமன்,தலைமை ஆசிரியருக்கு எதிராக சூழ்நிலை ஏற்பட்டாலும்,தருமன் ராமசாமியை விட்டு கொடுக்க மாட்டார்.


இதில் மற்றொரு தரப்பினர் ராம்சாமி பாண்டியன் தலித் சமூக சமூகமே கிடையாது...அவர்கள் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை (MBC ) வகுப்பை சார்ந்தவர்...எப்படி எஸ்.சி சான்றிதழ் வாங்கினார் என்றே தெரியவில்லை என அரசல் புரசலாக பேசிக் கொள்கின்றனர். தேர்தலிக்கு முன்பே அரசுக்கு ஆதாரத்துடன் புகார்கள் கொடுக்கப்பட்டதாம். ஆனால் எப்படி அனுமதிக்கப்பட்டார் என்றே தெரியவில்லை என்கின்றனர். அதுபோக ராமசாமியின் தந்தை பாண்டியன்,ராமசாமியை பள்ளியில் 1.6.1981 -ல் 1 ஆம் வகுப்பு சேர்க்கும் போதே வேதகார செட்டியார் (வரிசை எண் : 328) என்று குறிப்பிட்டுள்ளார். சகுந்தலாவின் சகோதரர் பெருமாள் என்வர் பள்ளியில் 10.06.1985 - ல் 1 ஆம் வகுப்பு ( பள்ளி ஆவணத்தில் வரிசை எண்:430) சேரும் போது சமூக பெயரில் செட்டியார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டு பல புகார்கால் 3.10.2016 லும், 14-01-2020 லும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை போல...விசாரிக்கட்டும் பார்ப்போம் என்று கூறினர். தருமபுரி ஆட்சியர் இதனை சுத்தமாக விசாரிக்கமாட்டார்களாம்...என்றும் கூறி புலம்புகின்றனர்.





ராமசாமி பற்றிய பள்ளி அவணத்தில் உள்ள தகவல்

முதலில் பாஞ்சாயத்து தலைவரின் கணவர் தலித் என்ற காரணத்திற்க்காக கொடியேற்ற விடாமல் தடுக்கப்பட்டாரா? என்பதை ஆட்சியரும்,காவல்துறையினரும் தீர விசாரித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும்,பின்பு  சகுந்தலா மற்றும் கணவர் உணமையான தலித்தானா என்பதை நிர்வாக விசாரிக்கட்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.#independence day