Updated: 12-10-2023 12:24 pm
இந்தியாவில் "சனதான ஒழிப்பு" என்ற வார்த்தையை முன்வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு இந்தியா முழுவதும் பிஜேபிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.இதனை இந்து மதத்திற்கு எதிரான கருத்து என பல்வேறு இந்துத்துவா மைப்புக்களால் பரப்பப்பட்டது. இதை வைத்தே பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா INDIA கூட்டணியில் பிளவை ஏற்படுத்தை பெரும் முயற்சி எடுத்தனர்.
ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ,தமிழக திமுக கூட்டணி கட்சிகள் சனாதன ஒழிப்பு மற்றும் சமத்துவ சமுதாயம் என்பதை தொடர்ந்து முன்வைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்திய அளவில் பிஜேபி கூட்டணி மற்றும் இந்துத்துவா அமைப்புகளுக்கு இடி இறங்கும் வகைவகையில் அடுத்த இந்து - முஸ்லீம் கலப்பு திருமணத்தை நடத்திவைக்கவுள்ளார்.
கிருஷ்ணகிரி கிழக்கு திமுக நகர செயலாளராக இருப்பவர் எஸ்.கே.நவாப் .இவர் தொடர்ந்து 3 வது முறையாக நகர செயலாளராக உள்ளார். இவரது மனைவி பரிதா நவாப் கிருஷ்ணகிரி கிழக்கு திமுக மாநில தலைமை செயற்க்குழு உறுப்பினராகவும், கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவராகவும் 2 வது முறையாக இருந்து வருகிறார். இவருடைய மூத்த மகன் அமீர் சுஹேல்.
சமூகத்தில் இந்து முஸ்லீம் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து மக்களிடையேயும், இந்து மத பூஜை போன்ற நிகழ்வுகளிலேயும் தன் மதம் பராது சமுத்துவ நன்மதிப்புடன் பங்குக் கொள்பவர்கள். இவர்களின் மகன் சுஹேல் வேளாளர் சமூக பெண்னை விருப்ப திருமணம் செய்ய நினைக்கும் போது, எந்த மறுப்பும் தெரிவிக்காது மதம் சாதி கடந்து திருமணத்திற்க்கு சம்பந்த ம் பேசி ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நவாப் குடும்பத்தினர் அமைச்சர் உதயநிதியின் கவனத்துக்கு செல்ல, அப்படியே முதல்வரின் காதுக்கும் சென்றது. முழு விஷயத்தை அறிந்த முதல்வர் ஸ்டாலின் இந்து முஸ்லீம் சமத்துவ சமூக நல்லிணக்க திருமணத்தை தாமே நடவைக்க முன்வந்துள்ளார். இதில் பல ஆண்டுகளாக நவாப் கட்டி வரும் வெண்கல கலைஞர் சிலையையும் திருந்து வைக்க உள்ளார்.
தற்போது முதல்வருக்கு நேரிடையாக அழைப்பு விடுக்கும் பொருட்டு அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட செயலாளர் மதியழகன் ,நவாப் , பரிதா நவாப் குடும்பத்தினர் தமிழக முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து அழைப்புவிடுத்தனர்.
ஆக நவம்பர் 23-க்கு பிறக்கு திமுக முதல்வர் ஸ்டாலின் சமுத்துவ சமுதாய முன்னெடுப்பு பேச்சை இந்திய அளவில் INDIA கூட்டணி மற்றும் பல மாநிலஙக்ளில் ட்ரெண்டாக்கவுள்ளதாடு ,சமுகத்தில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவுள்ளார்.#INDIAstalin