tamil news
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

பிரதமர் பாதுகாப்பு பிரச்சனை- விசாரணை செய்ய மாநில அரசும்,மத்திய அரசும் தனித்தனி உத்தரவு!

Updated: 08-01-2022 07:45 pm

tamil news

பிரதமர் பாதுகாப்பு பிரச்சனை- விசாரணை செய்ய மாநில அரசும்,மத்திய அரசும் தனித்தனி உத்தரவு!



பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதை கருத்தில்கொண்டு, ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, அதில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் ஹுசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வது மற்றும் கட்சிசார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல்வேறு திட்டமிடல்களுடன் பிரதமர் மோடி 05.01.22 அன்று காலை பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றார்.


ஹெலிகாப்டர் மூலமாக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மழை மற்றும் மோசமான வானிலை இருந்ததால் சீரடைவதற்காக சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் காத்திருந்தார்.பின்னர் நினைவிடத்திற்கு செல்ல தரைவழி மார்க்கத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்ட நிலையில் ,கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கும் என்பதால் அம்மாநில காவல்துறைக்கு தகவல் சொல்லபட்டு செல்ல அரம்பித்து,சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு மேம்பாலத்தின் மீது விவசாயிகள் போராட்டத்தால் பிரதமரின் கான்வாய் அங்கேயே நிறத்தப்பட்டு சுமார் 15-20 நிமிடம் காக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு நிகழ்வில் பங்கு கொள்ளாமல் மோடி திரும்பிச் சென்றார்.


இந்த நிகழ்வு இந்த அளவிலும் பேசும் பொருளாகியுள்ளது.காரணம் அந்த இடமானது பாகிஸ்தான் எல்லைக்கு அருகாமையில் உள்ள பகுதியாகும்.எப்படி பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது,மாநில காவல்துறை ஒத்துழைப்பு தரவில்லை ஒன்று மத்திய உள்துறையினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருவதால் வார்த்தை போர் மூண்டு வருகிறது. இது தொடராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.


இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகமும்,பஞ்சாப் மாநில அரசும் விரிவான விசாரணைக்கு தனித்தனியே உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப் மாநில அரசு 3 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி விசாரனைக்கு குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.