tamil news
  • test
  • டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்தில் அளிக்க வேண்டும்-அனைத்து அரசு, தனியார் ஆய்வகங்களுக்கு பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தல்
  • அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஸ்டாலின் இரங்கல்! - ரூ.3 லட்சம் நிதியுதவி!
  • இஸ்ரேலில் 160 பேர் உயிரிழப்பு. 1000 பேர் காயம்.. உலக அளவில் பெரும் சோகம்..!!
  • கர்நாடக எல்லை அத்திப்பள்ளில் பட்டாசு கடை விபத்து - ,இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

கள்ளகுறிச்சி ஸ்ரீமதி வழக்கு ..நீதிமன்றம் 18 ம் தேதிக்கு தள்ளிவைத்தது நீதிமன்றம்!

Updated: 10-08-2022 05:12 pm

tamil news

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி கடந்த மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தங்களுக்கு ஜாமின் கோரி கடந்த 2 முறை தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனிடையே 3 வது முறையாக அவர்களின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது.


சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் வசம் மாற்றப்பட்ட நிலையில் 5 பேரின் ஜாமீன் மனுக்களில் ஏன் இன்னும் சி.பி.சி.ஐ.டி. குற்ற வழக்கு எண்ணை பதிவு செய்யவில்லை என நீதிபதி சாந்தி கேள்வி எழுப்பினார்.

மேலும் ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கை வரும் வரை கால அவகாசம் வழங்க சிபிசிஐடி தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் விசாரணையை வரும் 18ஆம் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.#srimathideathcase