Updated: 12-01-2022 10:05 pm
மயானங்களில் உள்ள சாதிபெயரை நீக்குக- உயர்நீதிமன்றம் உத்தரவு!அதிரடி காட்டிய ஸ்டாலின் அரசு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு மயானம் அமைக்க நிரந்தரமாக இடம் ஒதுக்க கோரி, கலைச்செல்வி மற்றும் மாலா ராஜாராம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி அமர்வு விசாரணை செய்து வந்தது.இது தொடர்பாக கடந்த 12-ம் தேதி உத்தரவு ஒன்றை நிதிபதி அமர்வு தமிழக அரசிற்க்கு பிறபித்துள்ளது.அதன்படி சாதிபாகுபாடின்றி அனைத்து சாதியினருக்கும் பொது மயானங்கள் அமைய வேண்டுமென்றும், அருந்ததியர் மக்களுக்கு இடம் கிடைக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து தற்போது கள்ளக்குறிச்சி மடூர் கிராமத்தில் வசிக்கும் அருந்ததிய மக்களுக்கு பொது இடம் திமுக தலமையிலான ஸ்டாலின் அரசு உறுதி செய்யும் விதமாக துரிதமாக செயல்பட்டு வருகிறது. #highcourt