Updated: 18-11-2021 06:57 pm
சந்தானத்தின் தீச்செட்டியும்,சாராய உத்தியும்! பாமகாவின் 5 கோடியும் ..?..படிங்க..கண்டிப்பா சிரிப்பீங்க....
"ஜெய் பீம்" படம் வெளியானதில் இருந்தே பெரிய அளவில் சூர்யாவுக்கு பாராட்டுகளும் ,பாமக தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கிறது.இதற்கு எதிராக தயாரிப்பாளர் சூர்யா பதிலடி கொடுத்து வருகிறார்.இதனால் தமிழகம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட இந்த விஷயத்தை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இதில் பாமக கட்சியினர் வன்னிய சமூகத்தை அவமதித்து விட்டதாக கூறி, வன்னியர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மூலம் சூர்யாவுக்கு 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக பாமக கட்சியின் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் ," சூர்யாவிடம் இருந்து நஷ்ட ஈடாக பெரும் 5 கோடி ரூபாய் பணத்தை, ஜெய்பீம் படத்தில் கதாநாயகியாக வரும் செங்கேனிக்கு(அதாவது தற்போதைய உண்மையான பார்வதி அம்மாளுக்கு) வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இவர் கொடுத்த பேட்டியை வைத்து "நெட்டிசன்கள் பாமக கட்சியானது பிரபலமாவதற்கும்,தனது வாக்குகளை சாதிய ரீதியாக தக்கவைப்பதற்கும் சூர்யாவிற்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு, இதுபோன்ற பேட்டிகளை கொடுத்து வருகிறார்கள்",என்று கலாய்த்து வருகின்றனர்.
மேலும் சிலர்,"பாமக கூறும் சமூக நீதியானது எவ்வாறு அநீதியானது என்பது கீழே பார்ப்போம்", "அதாவது ஜெய்பீம் படத்தில் கதாபாத்திரத்தில் வரும் செங்கேனி( தற்போதைய பார்வதியம்மாள் ) தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கை காவல்நிலைய போலீஸ் தரப்பில் சமாதானம் பேசி முடியாததால், தமிழக காவல்துறை டிஜிபி, தனது அலுவலகத்தில் செங்கேனியை அழைத்து சமாதானம் பேசுவார். அதில் டிஜிபி கதாபாத்திரம்,செங்கேனியிடம்,' இழப்பீடாக பணம் தருகிறோம், தங்கள் பிள்ளைகளுக்கு வருங்காலத்தில் உதவட்டும்', இப்பணத்தை வைத்துக் கொண்டு இந்த வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்,'என்று கோரிக்கை வைப்பார். ஆனால் செங்கேனி கதாபாத்திரம் ," என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எனது பிள்ளைகளை வளர்க்கும் போது, இவ்வளவு பணம் உனக்கு எங்கிருந்து வந்தது அம்மா..?" என்று கேட்டார்கள் எனில் , நான் அதற்கு உன் அப்பாவை கொன்றவர்கள் கொடுத்த பணம்,"என்று என்னால் கூற முடியுமா..?. அதனால் தங்களுடைய உதவி எனக்கு தேவையில்லை எனக்கு நீதிதான் வேண்டும்",என்று மறுப்பு தெரிவிப்பாள்.
அதேபோல் தற்பொழுது குறவர் இன சமூகத்து மக்களின் கொடுமைகளை எடுத்துச் சொல்லும் ஜெய்பீம் படத்தில் உண்மை விளக்கத்தை ஏற்க மறுத்து,' தனக்கு ஏதோ அநீதியை ஏற்பட்டது போல, அநீதிக்கு உள்ளான மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை துணிவுடன் விலக்கிய சூர்யாவை எதிர்த்து,அவருக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கு தொடுத்து, அதில் இருந்து 5 கோடி ரூபாய் பணத்தை மீண்டும் பார்வதி அம்மாளுக்கு கொடுப்போம் என்பது, செங்கேனி "தன் சமூகத்திற்க்காக படித்தில் நடித்து ,குறவர் மக்களின் வாழ்க்கைக்கு உதவிய சூர்யாவிற்கு எதிராக பாமகாவினர் போராடி சூர்யாவிடம் இருந்து பெற்றுக் கொடுத்த பணம்தான் இந்த 5 கோடி ரூபாய் " ,என்று தன் பிள்ளைகளுக்கு சொல்வதுபோல பார்த்தால் ,பாமகவின் கோரிக்கை முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளதாகவே சமூக ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.
'இதற்கு பார்வதி அம்மாளுக்கு கொடுக்காமல் , தங்கள் வன்னியர் சங்கத்தின் வளர்ச்சிக்கு வைத்துக் கொண்டால் கூட நன்றாக இருக்கும், எனவும், இதற்குப் பேசாமல் சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்திருந்தால் கூட , இது போன்ற நல்ல படங்கள் இன்னும் பலர் எடுத்து பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் பல நடிகர்கள் வந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இவ்வாறு கண்மூடித்தனமாக எதிர்ப்பதால் மக்களின் குரலாய் வரும் நல்ல படங்கள் படங்கள் கூட வராமல் போக வாய்ப்புண்டு.இதை ஏன் பாமக தரப்பினர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்",என தெரியவில்லை நெட்டிசன்கள் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
சந்தானம் கலகலப்பு படத்தில் நடிக்கும்போது பாமக குறிப்பிடும் தீச்செட்டியை வைத்துதான் பஞ்சாயத்து தேர்தலில், தனது மாமாவை எதிர்த்து போட்டியிட்டு வாக்கு சேகரிப்பார். அந்த தேர்தலில் அவர் தண்ணீருக்கு பதிலாக ஊர் ஆண் வாக்காளர்களுக்கு பாலுக்கு பதிலாக சாராயத்தை பைப்பில் வரவைத்து ஊற்றுவார். ஏன் அந்த படம் வந்த போது பாமகவிற்கு தனது கட்சியை அசிங்கப்படுத்தி விட்டதாக தோன்றவில்லையா ? அது ஊருக்கே சாராயத்தை ஊற்றிக் கொடுப்பார் சந்தானம் ..அப்போதெல்லாம் வன்னியரை அசிங்கப்படுத்திவிட்டதாக தோன்ற வில்லையா..? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் சந்தானம் தனது அடியார்களுக்கு வேலை வைக்கும் பொழுது ஒரு இடத்தில் இருக்கும் பருத்தி மூட்டைகளை பழைய இடத்திற்கு மாற்றி விட்டு மீண்டும் அதே இடத்தில் வைக்க சொல்லுவார். அதற்கு ஒரு கதாநாயன் கேட்பார் ," சார் இதற்கு பருத்தி மூட்டை பேசாம குடோன்லே இருந்திருக்கலாமே ஏன் இதெல்லாம் பண்றீங்க?" ,என்று அதற்கு சந்தானம் ," டேய் இவங்களுக்கு கொடுக்குற சம்பளத்திற்க்கு என்ன வேலை வாங்கிறதுனு தெரியலயே ", என்பார்.
அதுபோல பார்வதியம்மாளுக்காக குரல் கொடுத்த சூர்யாவிடமே பணம் வாங்கி மீண்டும் பார்வதி அம்மாளுக்கு கொடுப்போம் என்கின்றனர் பாமகாவினர்.
எதற்க்கு இந்த வீன் விளம்பரம்..எதற்க்கு இந்த பப்ளிசிட்டி...ஏன் இப்படி அப்பாவி மக்களின் உணர்ச்சிகளை, மனாசாட்சி இன்றி தூண்டிவிட்டு அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளை எற்படுத்துகிறீர்கள் என்று பாமகவினரை பார்த்து சமூக சீர்த்திருத்தவாதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.jaibheem#Pmk#Santhanam