Updated: 14-11-2021 07:35 pm
ஜெய்பீம் சூர்யாவின் அடுத்த அதிரடி செயல்! ரூ.10 லட்சம் டெபாசிட்!
"ஜெய் பீம்" படம் வெளியானதிலிருந்து சூர்யாவிற்கு தொடர்ந்து பாராட்டுக்களும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்துவருகிறது. ஒருபுறம் தமிழக முதல்வர் படத்தை பார்த்துவிட்டு இருளர் இன மக்களுக்கு நலத் திட்டங்களை அறிவித்து வருகிறார். மேலும் சூர்யா ஏற்கனவே இருளர் இன மக்களுக்காக 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்து இருந்தார். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் "படத்தில் இறந்து போன ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் சென்னையில் மிகக்கொடுமையான இக்கட்டில் தற்பொழுது வாழ்ந்து வருகிறார். அவருக்கு தங்கள் குழுவின் மூலமாக உதவிகள் செய்தால் நன்றாக இருக்கும்", என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது அதற்கு சூர்யா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்," ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட் தொகையாக ரூ. 10 லட்சம் வங்கியில் செலுத்தி வைப்பது என்றும், வருங்காலத்தில் அவரது வாரிசுகள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக வங்கியில் செலுத்தப்படும் என்றும் இன்ப அதிர்ச்சித் தகவலை குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருந்த கடிதம் தற்போது ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.சூர்யா அடுத்தடுத்து இருளர் இன மக்களுக்கு செய்யும் நன்மைகள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பொதுவாக திரையில் நடித்துவிட்டு பணம் சம்பாதிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சூர்யாவின் தற்போதைய செயல்கள் தமிழக மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.