Updated: 17-11-2021 03:03 pm
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் உத்தரவு!
வருகிற பொங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்கள் பயன்படும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் உத்தரவு படி வருகிற பொங்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய தொகுப்பினை ரேஷன் கடைகள் மூலம் வழங்க உள்ளது.தமிழகத்தில் உள்ள சுமார் 21548060 குடும்பங்களுக்கு ரூ.1088 கோடி செலவில் வழங்கப்படுகிறது.#pongal2022